Wednesday, August 10, 2011

நெருப்புநரியில்(firefox) பார்த்த காணொளியை சேமிக்கலாம் !!

 தற்போதைய நிலவரப்படி alexa தரவரிசையில் காணொளிகளை பகிரும்  youtube.com  தளம் 3ஆம் இடத்தில்லுள்ளது. இதிலிருந்தே நம் எந்தளவுக்கு இணையத்தில்  காணொளிகளை பார்க்கின்றோம்  என்பது தெரிகின்றது.


இணையத்தில் பிட்டுப் படங்கள் முதல் புட்டு செய்வது வரை, சுவற்றில் ஆணியடிப்பது எப்படி என்பது முதல் ஐ-போனை எப்படி அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் போடுவது என்பது வரை  காணொளியின் வகைகள் ஏராளம் ஏராளம். 
*

எப்போதும்  காணொளிகளைக் கண்டு ரசிக்கும் நமக்கு சில நேரங்களில்  காணொளிகளை பார்த்து முடிந்தவுடன் அவற்றை தரவிறக்கி கொள்ள விரும்பும் சூழ்நிலைகளும் நேரலாம். அதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் எப்படி மீள தரவிறக்காமல் ஏற்கனேவே நெருப்புநரியில் பார்த்த  காணொளியை எவ்வாறு  சேமிக்கலாம் எனபார்ப்போம்.


முதலில் இந்த நிட்சியை (Download Flash and Video)   பதிந்து கொள்ளுங்கள் 

 இந்த நீட்சியை பதிந்து கொண்ட பிறகு ஒரு முறை உலாவியை மூடி பின் திறக்கவேண்டும்.

இனி உங்கள்  நெருப்புநரியின் கிழ்மூளையில் புதிதாக ஒரு பட்டன் வசதி வந்திருப்பதை கவனிக்கலாம்.
இந்த addon bar இணை காணாதவர்கள் இந்த முறையில் இணைத்துகொள்ளுங்கள்.
இனி என்ன பார்க்க வேண்டிய காணொளியை பார்த்து முடிந்தவுடன் கிழ்மூளையில்  உள்ள  பட்டனனை அழுத்தி வரும் திரையில் உள்ள இணைப்பை அழுத்தி செமித்துக்கொள்ளவும். (படத்தைன்மேல் அழுத்திபெரிதாக்கி பார்க்கவும் )

மேலும் இந்த நீட்சிமுலம் flash games, போன்றவர்ரையும் சேமிக்கலாம்.


எனக்கு கோவையாக எழுதத்தெரியாது சில பந்திகளை சுட்டுள்ளேன்.
சுடுதண்ணி
 

4 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள குறிப்பு.

முனைவர் இரா.குணசீலன் said...

டவுன்லோடு எல்பரைப் போலதான் இந்த மென்பொருளுமா?

TJ said...

ஆம் நண்பரே.

சக்தி கல்வி மையம் said...

பயனுள்ள தகவல்..
நன்றி நண்பரே,..